மாணவர்கள் நலன் முக்கியம்

சென்னை, பிப்.20-

சென்னை திருமுல்லைவாயலில் உள்ள மங்கலம் வித்யாஷ்ரம் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 14 மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘
நாங்கள் ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தைத்தான் படித்தோம். பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்துக்கான குறியீட்டு எண் 184 என்பதற்கு பதில் ஆங்கிலம் (தொடர்பு) பாடத்துக்கான குறியீட்டு எண் 101 என்று தவறுதலாக குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டோம். இதை கடைசி நேரத்தில்தான் தெரிய வந்துள்ளது. இந்த தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே, நாங்கள் படித்த ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தில் தேர்வு எழுதும் விதமாக கேள்வித்தாள்களை தேர்வு மையத்துக்கு அனுப்ப சி.பி.எஸ்.சி., தலைவருக்கும், மண்டல அதிகாரிக்கும் உத்தரவிடவேண்டும’’ என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.வெண்ணிலா ஆஜராகி வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘மாணவர்களுΦம் அவர்களது கல்வியும்தான் முதலில் முக்கியம் என்பதை மனதில் கொண்டு, அவர்கள் படித்த ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும். இதற்காக அவர்கள் தேர்வு எழுதும் மையத்துக்கு கூடுதலாக 14 கேள்வித்தாள்களை சி.பி.எஸ்.சி. நிர்வாகம் அனுப்பிவைக்கவேண்டும். அதற்கான செலவு தொகையை பள்ளி நிர்வாகம் ஏற்கவேண்டும’’ உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com