Anitha sumanth judge senthil.kumar judge order pnpj knbj committee kமயிலாப்பூர் சாய்பாபா கோயில் நிர்வாகக் குழு கலைப்பு

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் நிர்வாகக் குழு கலைப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவு
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை நிர்வகிக்கும் சாய் சமாஜ நிர்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீ திமன்றம், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என். பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகி யோர் கொண்ட இடைக்காலநிர் வாகக் குழுவை அமைத்து உத்தர விட்டது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள் ளன. இந்தக் கோயிலை அகில இந்திய சாய் சமாஜம் என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகக் குள றுபடிகள் மற்றும் முறைகேடு களை எதிர்த்து சென்னை உயர்நீ திமன்றத்தில் தங்கராஜ் என்பவர் உள்பட பலர் வழக்குத் தொடர்ந் தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக் கல் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீதிபதி பி.என்.பிர காஷ் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ஆய் வுக்குச் சென்ற நீதிபதி பி.என்.பி ரகாஷுக்கு சமாஜ நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வில்லை. 3 மாதங்களுக்கு ஒரு

முறை கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்த ரவையும் நிறைவேற்றவில்லை. வரவு, செலவு விவரங்கள் முழு மையாக தணிக்கை செய்யப்பட வில்லை.

சமாஜத்தில் முன்பு 5,600 உறுப்பினர்கள் இருந்துள்ள னர். ஆனால், தற்போது 522 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள் ளனர். சமாஜத்தின் நிதி பரிவர்த் தனைகளில் பல்வேறு குளறுபடி கள் உள்ளன. அதிகப்படியான தொகை எந்த ஒப்புதலும் இல்லா மல் செலவழிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிபதி பி.என்.பிரகாஷ் அறிக்கையின் அடிப்படையில் சாய் சமாஜ நிர்வாகக் குழுவை உடனடியாக கலைக்கிறோம்.

பல் لاد

நவீ வது பட் கள் டும்

ண க்கு பநா உள்

.

அந்த சமாஜத்தை நிர்வகிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிப திகள் கே.என்.பாஷா, பி.என்.பி ரகாஷ் ஆகியோரைக் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கிறோம். இந்தக் குழு வுக்கு பட்டயக் கணக்காளர்கள் அனந்தராமன், அருண் பாலாஜி ஆகியோர் தேவையான உதவிக ளைச் செய்ய வேண்டும். சமாஜத் தின் பொறுப்பாளர்கள் உடன டியாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வு பெற்ற நீதி பதிகளிடம் பொறுப்புகளை ஒப் படைக்க வேண்டும். இந்தக் குழு தங்களது நிர்வாகம் தொடர்பான அறிக்கையை செப்.14-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version