போதை பொருள் 7 years தண்டனை அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன்

இரண்டரை கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகளும், ஒருவருக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொளத்தூரில் உள்ள செந்தில் நகரில் இருசக்கர வாகனங்களில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் இரண்டரை கிலோ கஞ்சா, 20 கிராம் மெத்தாபெத்தமின், 250 எல்.எச்.டி. போதை முத்திரைகள், 50 மெதிலின் டைஆக்சி மெத்தாபெத்தமின் போதை மத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதனடிப்படையில் பதிவான வழக்கில் வாகனந்த்தில் வந்த வசந்தகுமார், நிஷாந்த் ராயன், பாலச்சந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பான வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர்
கே.ஜே.சரவணன் ஆஜராகி மூவர் மீதான குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடனும், சாட்சியங்களுடனும் எடுத்துரைத்தார்.

இதையடுத்து குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி திருமகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், வசந்த்குமார் மற்றும் நிஷாந்த் ராயன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா இரண்டரை லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாலச்சந்தருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

You may also like...