போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் விசாரித்தார். அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார்.

கஞ்சா வைத்திருந்த புகாரில் கைதான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள காபி கடையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அங்கிருந்த இருவரிடமிருந்து, 7 கிலோ எடை அளவுக்கு கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அயோலுவா டேவிட் அடேபாகின், ஒலுகு ஒலிசேமேகா இம்மானுவேல் ஆகிய இரு கல்லுாரி மாணவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் விசாரித்தார். அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார்.

You may also like...

CALL ME
Exit mobile version