RTi order stayed by. Mhc chief bench

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பத்துக்கு பதிலளிக்கும் பொது தகவல் அதிகாரி, ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்துடன், ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு, சிற்றரசு என்பவர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும், அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், அந்த விவரங்களை வழங்கப்படாததை எதிர்த்து சிற்றரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பங்களுக்கு தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விண்ணப்பங்களுக்கு அளிக்கும் பதில்களின் ஒவ்வொரு பக்கத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரி கையெழுத்திடுவதுடன், அவரது ஆதார் விவரங்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இதுசம்பந்தமாக தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தகவல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மனுவுக்கு பதிலளிக்கும்படி சிற்றரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version