நீதியரசர்கள் நீதியரசர் எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதியரசர் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு இந்த கமிட்டியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலய சுவாமிகள் அவர்களை
ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அறநிலைத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் திரு. சண்முகசுந்தரம், திரு ஜெய்திப் குப்தா
புதியதாக ஐந்து பேர் கொண்ட பட்டியலை கொடுத்திருப்பதாகவும் திரு சரவணன் என்பவரை ஆகம கமிட்டியில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என வாதிட்டனர், இதனை மறுத்த அர்ச்சகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் திரு P.வள்ளியப்பன் மற்றும் திரு. குரு கிருஷ்ண குமார் அந்த பட்டியலில் இருக்கும் வேறு ஒரு நபரை உறுப்பினராக ஆக்க வேண்டும் எனக் கூறி மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலய சுவாமிகள் அவர்களை இந்த கமிட்டியில் உறுப்பினர் ஆக்க ஆட்சேபனை இல்லை என்றும் வாதிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் நீதியரசர் எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதியரசர் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு இந்த கமிட்டியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலய சுவாமிகள் அவர்களை நியமிக்க உத்தரவிட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த கமிட்டி ஆனது மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களில் எது ஆகம முறைகளைப் பின்பற்றி தினசரி பூஜை நடக்கும் கோயில் எது ஆகமங்களை பின்பற்றாமல் தினசரி பூஜைகளை நடக்கும் கோயில் என்று அடையாளம் காண உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கினை ஜனவரி மாதம் ஒத்தி வைத்தனர்.