நீதிபதி, Dandabani # நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கோரி இந்து மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அண்ணல் அம்பேத்காரின் 65 ஆவது நினைவு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி வரவுள்ளது. அன்றைய தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கும் அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜுன் சம்பத்தை யார் தடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க காவல்துறையினர் அர்ஜுன் சம்பத்துக்கு அனுமதி மறுக்காத நிலையில், வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
…..

You may also like...

CALL ME
Exit mobile version