நீதிபதி எம் எஸ் ரமேஷ் 2016 அக்டோபர் முதல் இதுவரை 85 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு, கலைமகள் சபா வழக்கு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை என தலைமை வழக்கறிஞர் பாராட்டு தெரிவித்தார்.

oplus_0
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்எஸ் ரமேஷ், டிசம்பர் 27ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் இன்று பிரிவு உபசாரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், இந்த ஆண்டில் 11 நீதிபதிகள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இது நீதித்துறை நிர்வாகத்தை நிச்சயமாக பாதிக்கும் என குறிப்பிட்டார்.
நீதிபதி எம் எஸ் ரமேஷ் 2016 அக்டோபர் முதல் இதுவரை 85 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு, கலைமகள் சபா வழக்கு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை என தலைமை வழக்கறிஞர் பாராட்டு தெரிவித்தார்.
ஏற்புரையாற்றிய நீதிபதி எம் எஸ் ரமேஷ், பழமையான இந்த உயர் நீதிமன்றம் நீதியின் வாழும் அடையாளமாக திகழ்கிறது. இந்த நீதிமன்றத்தில் நாங்கள் தற்காலிக காவலர்கள். நீதி வழங்குவது மட்டுமல்லாமல் நீதிபதிகளுக்கு பொறுமை முக்கியம் என்பதை பதவிக்காலத்தில் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
நீதிபதி எம் எஸ் ரமேஷ் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆக குறைகிறது.
[20/12, 07:17] Sekarreporter:
[20/12, 07:18] Sekarreporter: 👍