நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, கொலையை பார்த்த சாட்சியின் வயது 80 என்பதில் விசாரணையை விரைவு படுத்தவேண்டும் என்று மனுதாரர் கூறுவது நியாயமானது என்பதால், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான ஆடிட்டர் ரமேஷ், கடந்த 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி ஆடிட்டர் ரமேஷின் 91 வயதான தாய் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், கொலையை நேரில் பார்த்த சாட்சிக்கு தற்போது 80 வயதாகிறது எனவும், எனக்கு 91 வயதாகுகிறது என்பதால் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, கொலையை பார்த்த சாட்சியின் வயது 80 என்பதில் விசாரணையை விரைவு படுத்தவேண்டும் என்று மனுதாரர் கூறுவது நியாயமானது என்பதால், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

CALL ME
Exit mobile version