நாசிக் டிசிஎஸ் நிறுவன பாலியல் வழக்கு: நீடா கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

நாசிக் டிசிஎஸ் நிறுவன பாலியல் வழக்கு: நீடா கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் அலுவல​கத்​தில் நடை​பெற்ற பாலியல் தொல்​லை, மதம் மாற கட்டாயப்​படுத்​துதல் தொடர்​பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்​கு​ தொடர்பாக இது​வரை 8 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இதில் டிசிஎஸ் நிறு​வனத்​தில் ஆபரேஷன்ஸ் மேனேஜ​ராக வேலை பார்த்த நீடா கான் மட்​டும் தலைமறை​வாக உள்ளார்.

இந்நிலையில், 2 மாத கர்ப்​பிணி​யாக இருப்பதால், தனக்கு இடைக்​கால ஜாமீன் வழங்​கக் கோரி கடந்த சனிக்​கிழமை நாசிக்​கிலுள்ள நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை விசாரித்த கூடு​தல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்​கில் போலீஸ் தரப்​பினரும், புகார்​தா​ரரும் வரும் ஏப்.27ம் தேதிக்​குள் பதில் அளிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டார். இதைத் தொடர்ந்து தலைமறை​வாக உள்ள நீடா கானை கைது செய்ய போலீ​ஸார் தேடி வருகின்றனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version