நாகூர் தர்கா புனித குளம், “ஷிஃபா குண்டா” விற்கு எவ்வித சேதமோ, அதன் அளவில் மாற்றமோ இல்லாமல் அதன் பழைய நிலைக்கும், அமைப்பிற்கும், மீண்டும் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

: நாகூர் தர்கா புனித குளம், “ஷிஃபா குண்டா” விற்கு எவ்வித சேதமோ, அதன் அளவில் மாற்றமோ இல்லாமல் அதன் பழைய நிலைக்கும், அமைப்பிற்கும், மீண்டும் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
[10/09, 18:22] நாகூரைச் சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது, நாகூர் தர்காவின் புனித குளம் ஷிஃபா குண்டா உள்ளது. நாகூர் தர்காவுக்கு வரக்கூடியவர்கள், இந்த புனித குளத்தில் நீராடக்கூடியவர்களான முஸ்லிம்களும், இந்து பக்தர்களும், இங்கு நீராடி வருகிறார்கள். இந்த புனித குளத்தில் குளித்தால் அனைத்து நோயும் நீங்கிவிடும் என்று நாகூர் தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு நீண்ட காலமான நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் நாகூர் தர்காவின் புனித குளத்தின் வட
கரை, தென்கரை மற்றும் கீழ்க்கரை மதில் சுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த சேதமடைந்த குளத்தை புதுப்பிக்கும் பணி தமிழக அரசின் உதவியுடன் நடந்து வருகிறது ஆனால் குளத்தின். ஆனால், புனித குளத்தின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு புறம் இரண்டு மீட்டர் அளவில் குளத்தின் பரப்பளவை சுருக்கும் விதமாகவும், மற்றும் அக் குளத்தின் உள்ளே சென்று தோண்டும் பணி நடத்த குளத்தின் நீரை இறைத்தும், அக் குளத்தின் நிலத்தடியில் தேவையற்ற கட்டுமானம் நடத்துகிறார்கள். இதனால் குளத்தின் கரையின் சுவர் பகுதி அருகே பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. குளத்தின் நீளம், அகலம் அதன் நீர்க் கொள்ளளவு குறைக்கப்படுகிறது. எனவே குளம் ஏற்கனவே எப்படி இருந்ததோ அதே போல் தான் வைத்து சேதமடைந்த சுவர் களை கட்ட வேண்டும். இதற்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரித்து மனுதாரர்கள் புதிய மனுவை நாகப்பட்டினம் தாசில்தாருக்கு மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இம் மனு சம்பந்தப்பட்டவர்கள் தாசில்தாரிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். 12 வாரத்துக்குள் அந்த மனு மீது தாசில்தார் செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும். பழைய நிலைக்கு நாகூர் தர்கா குளம் ஏற்கனவே, இருந்துள்ளதுபடியே, 12 வாரங்களுக்குள் கொண்டு வந்து மீட்டெடுக்க வேண்டும். அதன் பிறகு, அவர் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

You may also like...