தேவநாதன் யாதவ், 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,
தேவநாதன் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய விசாரணையால் எந்த பயனும் ஏற்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீது உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தேவநாதன் யாதவ்விற்கு வரும் அக்டோபர் 30 ம் தேதி வரை நிபந்தனை இடைக்கால ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.

மேலும் பாஸ்போர்டை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் ஒப்படைக்க வேண்டும்,
100 கோடி ரூபாயை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 30 ம் தேதிக்குள் டெபாசிட் வேண்டும், ஒவ்வொரு திங்கட்கிழமை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் நேரில் ஆஜராகி
சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வரும் அக்டோபர் 31 ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நிபந்தனைகளை விதித்த நீதிபதி, இடைகால ஜாமீன் காலத்தில் விசாரணைக்கு தேவைப்பட்டால் தேவநாதன் யாதவ்விற்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 31 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com