தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் muthuraj , இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆயுதப் படையினருக்கு, தபால் மூலம் வாக்கு செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கும் இதே வசதியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் எஸ்.முத்துராஜ் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தேர்தல் நாளன்று, வாக்குப்பதிவை கண்காணிக்க, வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் இருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும், அவர்களின் வாக்குகள் சொந்த ஊர்களில் தான் இருக்கும். இதனால், நீண்ட தூரம் பயணித்து வாக்களிக்க வேண்டியுள்ளதாக, அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் போட்டியிட்டதையும், டில்லியில் வசிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டி, தொலை தூரத்தில் வாக்குரிமை உள்ள வேட்பாளர்களால் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய முடியாது என்பதால், வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.