தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் இலச்சினை களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் இலச்சினை களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்துள்ள சென்னைசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, இலச்சினைகள், பெயர் மற்றும் முத்திரைகள், ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை மற்றும் ஊடகங்களில் டிஜிபி விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் இதனை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார். சின்னங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து தகவல்களை பெறுவதற்கும், விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் பொதுத்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கு முடித்து வைத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜனவரி 21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version