தென்பெண்ணை ஆற்றுக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
தென்பெண்ணை ஆற்றுக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம், அரகண்டநல்லூர் கிராமத்தைச் சார்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே. ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.
அவரது பொதுநல வழக்கு மனுவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆத்தங்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன .
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியிருந்ததாகவும், மேற்படி மனு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை மனுதாரருக்கு அனுப்பி வைக்குமாறு திருக்கோவிலூர் பகுதிக்குட்பட்ட வருவாய் வட்டாட்சியர், மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் அரசு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன்,
என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து
6 காலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள்
உத்தரவு பிறப்பித்துள்ளனர் .