தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார்.

இந்த கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யபட்டனர்.

கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் உள்ளிட்டோர்க்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என கோரி உயிரிழந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் , சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தின் ஆளும் கட்சியின் எம்.பிக்கு எதிராக நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை எனவும் வழக்கு விசாரணை நடைபெறும் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது மேலும் அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதும், அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு ரமேஷ் வரும் போது பெரும் எண்ணிக்கையிலான அவரின் ஆதரவாளர்கள் திரண்டு நீதிமன்ற வளாகத்தில் கூடுகின்றனர். மேலும் வழக்கில் சாட்சிகளாக உள்ளவர்கள் தொழிலாளர்கள் மற்றும் கிராம வாசிகளாக உள்ளார். இதனால் அரசு தரப்பு சாட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் இது நீதிமன்ற பணியாளர் மற்றும் காவல்துறையினர்க்கும் அச்ச உணர்வு ஏற்படும். மேலும் காவல்துறை விசாரணையில் எம்.பி.ரமேஷ் தலையிடுவதாகவும் வழக்கை திசை திருப்ப முயல்வதால் அரசு வழக்கறிஞர் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே வழக்கை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அதுவரை கடலூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...