தவெக கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி 108 இடங்கள் பிடித்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய தவெகவின் கோரிக்கையை ஆளுநர் பெரும்பான்மை இல்லை எனக் கூறி நிராகரித்து வந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வேல்முருகன், தவெக கட்சிக்கு மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையிலும் தவெக கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்றார்.
ஆனால் பெரும்பான்மை இல்லை எனக்கூறி உரிமை கோரிய கோரிக்கையை நிராகரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்தார்
முதல்வரை நியமிப்பது ஆளுநரின் அரசியலமைப்பு சட்ட கடமை என்றும் நியமனத்தை நிறுத்திவைக்க சிறப்புரிமை அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக்காட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த காலத்துக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவும் கோரிக்கை வைத்தார்.
உடனடியாக விஜய்-யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்து விடுத்து விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.