தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி சுந்தர்மோகன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஜெகநாதன்

ராணிபேட்டையில் தக்கோலத்தில் ஜலநாதேஸ்வர் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை புதுப்பிக்க கோரி சென்னை ஐகோர்ட் வக்கீல் ஜெகநாதன் என்பவர் சென்னை ஐகோர்டடில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி சுந்தர்மோகன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஜெகநாதன் கோர்ட்டில் ஆஜராகி , ஜலநாதேஸ்வரர் சிவன் கோயில் 1350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில் குளம் பழுதடைந்துள்ளது. கோயில் மதில் சுவர் இடியும் தருவாயில் உள்ளது, கோயில் கோபுரம் பழுதடைந்து உள்ளது. இதை புதுப்பிக்க கோரி இந்து அறநிலையத்துறைக்கு மனு கொடுத்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை , கோயில் கும்பாபிசேகம நடந்து 15 ஆண்டுகளாகிவிடடது என்றார்.

அப்போது இந்துஅறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் அருண் நடராஜன், இதுகுறித்து மாநில அளவிளான கோயில் புரணமைப்பு குழு ஆராய்ந்து பார்த்து ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் கோயில் புதுப்பிக்கும் பணி தொடங்கும் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், இந்து அறநிலையத்துறையின் உத்தரவாத்தை பதிவு செய்து கொண்டு, விரைவாக இந்த பணியை இந்து அறநிலையத்துறை தொடங்கி முடிக்க வேண்டும். இதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் மனுதாரர் கோர்ட்டை அனுகலாம் என்று உத்தரவிட்டனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com