டிக்கெட் எடுக்க கூறியதற்காக காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிக்கெட் எடுக்க கூறியதற்காக காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்த போது, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் ஏறியுள்ளனர்.

அவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறிய நடத்துனர் ரமேஷை, இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நடத்துனர் ரமேஷ் காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயசந்திரன், பாதிக்கப்பட்ட நடத்துனர் ரமேஷுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும், இரு காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட அவசியமில்லை எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...