தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யபட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும், இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கொண்டு விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது யானை ராஜேந்திரன் சார்பில், ஆவணங்கள் காணாமல் போகவில்லை எனவும் அவை அகற்றபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை 29 சிலைகள் மீட்கப்பட்டு பலர் கைது செய்ய பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் காணாமல் போனதாக கூறி வழக்கை விசாரித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி’யே இந்த வழக்குகளை கைவிட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே இது முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கடந்த 1983, 1984, 1989, 1992 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் சம்மந்தமான ஆவணங்கள் தான் காணாமல் போனதாகவும், இதில் 23 ஆவணங்கள் தற்போது கண்டுபிடிக்கபடுள்ளதாகவும், 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆவணங்கள் காணாமல் போன 41 வழக்குகளை விசாரித்த அதிகாரிகள் யார்? யார்? எனவும் காணமால் போன ஆவணங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You may also like...