தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில்
இந்தி இல்லாமல் தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததாகவும், இந்தி இல்லாமல் இந்தியா சாதித்தவை ஏராளம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தி தெரியாத தலைமுறையினரிடம்,
இந்தியை ​​தேவையில்லாமல், கூடுதல் சுமையை திணித்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, எந்த காரணமும் இல்லாமல் தேசிய கல்வி கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்கும் முயற்சியை தமிழகம் ஏற்க கூடாது என்றும் எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்
1976 ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகள் தமிழகத்திற்கு பொறுத்தாது என்பதால்,1963 ம் ஆண்டின் அலுவல் மொழி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்பதனால் மனுதாரின் வழக்கு சட்ட விரோதமானது என்றும்,
இந்த மனுவை தாக்கல் செய்து 2020 தேசிய கல்வி கொள்கையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதை தடுக்க நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் குழுக்களை அமைத்து அறிக்கைகளை பெறுவதாக மனுதாரர் கூறுவது, கண்டனத்துக்குரியது
மனுதாரர் தமிழகத்தில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும்,சம்ஸ்கிருத மொழியாக கொண்டு வர வேண்டும் என்பது ஆட்சேபனைக்குரியது என்றும், தமிழகத்திற்கு அலுவல் மொழியின் கீழ் வழங்கப்படும் விலக்குற்கு எதிரானது என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

You may also like...