டீக்கடையை அகற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை ஆவடியைச் சேர்ந்த வி.எஸ்.பீட்டர் (வயது 71) என்பவர் டீக்கடையை அகற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்
தனது தந்தை சவரிமுத்து சுதந்திர போராட்ட தியாகி என்றும், நாங்கள் பர்மா அகதியாக 1968-ம் ஆண்டு தமிழ்நாடு வந்தோம். 1969-ம் ஆண்டு
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் லோடுமேனாக அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நியமித்தார். வேலை செய்யும்போது தனக்கு காலில் அடிப்பட்டதால், இந்த வேலையை தொடர முடியவில்லை.
இதனால், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அண்ணாநகர் குடோன் வளாகத்தில் டீ கடை வைக்க அப்போதைய நிர்வாக இயக்குநர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த 49 ஆண்டுகளாக எந்த இடையூறு இல்லாமலும் கடையை நடத்தி வந்தேன்.

இந்த கடைக்கான வாடகைத் தொகையை கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி வரை முறையாக செலுத்தி வந்தேன். அதன் பின்னர், வாடகைத் தொகையை வாங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

முன் அறிவிப்பு எதுவுமின்றி மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர்.
இதுகுறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநருக்கு புகார் மனு அனுப்பினோம்.

இந்தநிலையில், என் டீக்கடை கட்டிடத்தையே இடித்து தள்ளிவிட்டனர். இந்த கடையை நம்பித்தான் என் வாழ்வாதாரமே உள்ளது. எனவே, என் டீக்கடையை மீண்டும் கட்டித்தரவும், மனஉளைச்சலுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, இந்த மனுவுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் பதில் அளிக்க வேண்டும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
…………….

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com