சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி ஆஜராகினார். 

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி ஆஜராகினார். 

திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை  பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.  இதற்கு எதிராக  திமுக எம்.பியும், பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 17ஆம் தேதி அண்ணாமலை விசாரணைக்கு ஆஜரானார். அடுத்த விசாரணைக்கு டி.ஆர்.பாலு ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நீதிபதி செந்தில்குமார் முன் இன்று வழக்கு விசாராணைக்கு வந்த போது டி.ஆர்.பாலு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். 

சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்திருக்கிறது. தொடர்ந்து வழக்கு செப் 22ஆம் தேதி க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் 2004ல் நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை. அப்போது போகாத மானம் டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்டதன் மூலம் போய்விட்டதா என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இந்த மாதிரி உங்களை கேட்க சொன்னாரா?  என்று செய்தியாளரிடம் காட்டமாக பேசிய டி.ஆர்.பாலு, “அண்ணாமலைக்கு நான் சரியான நேரத்தில் பதில் கொடுப்பேன்” என்றார். 

தொடர்ந்து 10000 கோடி ரூபாய்  சம்பாதித்தது என அண்ணாமலை குற்றசாட்டியது குறித்த கேள்விக்கு, விடுயா… போயா என டென்ஷன் ஆனார் டி.ஆர்.பாலு எம்.பி.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version