சீமைக் கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது ordees reserved cj benxh aag jr gp muthukumar

சீமைக் கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பான கொள்கை முடிவை அரசாணையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என். சதீஷ்குமார், என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சீமைக் கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது என்றும் கூறி ஜூலை 13 தேதியிட்ட அரசாணையை தாக்கல் செய்தார்

சீமைக் கருவேல மரங்களை இயந்திரம் மூலமும், ரசாயன முறை மூலமும் அகற்றக்கூடிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன என்றும், முன்னேற்றம் என்பதை காகிதத்தில் மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதனால் அரசாணை மற்றும் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்ல் முடியாது என தெரிவித்தனர். மேலும், அன்னிய மரங்களை அகற்றும் பணிகளில் தனியாரை ஏன் ஈடுபடுத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த பணியில் விருப்பப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

You may also like...