சிறுமியை பாலியல் கொடுமை செய்த 55 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Pp kabitha

  1. சிறுமியை பாலியல் கொடுமை செய்த 55 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் கால் டாக்சி ஓட்டுநராக இருந்த 55 வயதானவர், அவரது உறவினரான 14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதை தாயிடம் சிறுமி கூறியதை அடுத்து, சென்னை காவல்துறையில் தாய் அளித்த புகாரில், கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கால் டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்துள்ள தீர்ப்பில், கால் டாக்சி ஓட்டுனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசிற்கும் உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version