சட்டப் போராட்டம் நடத்துகிறேன்.பதவியை நீக்குகிறேன் என கட்சியினரையும் தமிழக மக்களையும் குழப்பாமல் ,மாற்றி மாற்றி ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்திவிட்டு,அழிவுகளை சந்தித்த பின்பு இப்பொழுது அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை தான் சரியான தீர்வு என முடிவெடுத்திருப்பது போல் அல்லாமல்,இருதரப்பும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பேசி முடிவுக்கு வருவதுதான் ஒரே வழி. By S.முத்துராஜ் B.A.,BL.,MBA.,Ph.D. மேனாள் தகவல் ஆணையர் தமிழ்நாடு தகவல் ஆணையம்.
[13/05, 06:55] sekarreporter1: [13/05, 01:56] Muthuraj: ஒரு கட்சித் தலைவர் அல்லது கொறடா, அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும், மக்களின் தீர்ப்புக்கும் அல்லது ஜனநாயகக் கொள்கைகளுக்கும் எதிரான உத்தரவை வழங்கினால், அதை ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
Indian Act 1919 மூலம் சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்ட காலம் முதல், இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் மக்களின் தீர்ப்பின் உயர்ந்த முக்கியத்துவம் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
மேலும், மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்புக்கும் மக்களின் தீர்ப்புக்கும் எதிராக செயல்படுமாறு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்தக் கட்சி தலைவரும் உத்தரவிட முடியாது.
தொடர்ந்து, Government of India Act, 1935 மற்றும், 1947 Independent Act தொடர்பான விவாதங்கள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சட்ட கலந்துரையாடல்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களின் சுயாதீன பொறுப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரிவினைக்கு முன்பே அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தலைவர்களின் முடிவுகளை மட்டும் செயல்படுத்தாமல், சுயாதீனமாக விவாதித்து செயல்பட்டிருந்தால் பிரிவினையையே தடுக்க முடிந்திருக்கலாம் என்ற கருத்துகளும் அக்கால அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்பட்டன.
அதேபோல், இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் சட்ட அறிஞர்கள் நடத்திய விவாதங்களில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் உயர்ந்த கடமை, ஜனநாயகம், மக்களின் தீர்ப்பு ,அரசியல் அமைப்பு ஆகியவற்றை காப்பதற்குரிய நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்போது நடைபெறும் அதிமுக MLA கள் தொடர்பான பிரச்சனையை, ஏற்கெனவே உள்ள எந்த நீதிமன்றத் தீர்ப்புடனும் நேரடியாக ஒப்பிட முடியாது. ஏனெனில், அதிமுக வில் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக பல நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சட்டமன்ற பேரவைத் தலைவர், “இவர் தான் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவர்” என்று நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்திலிருந்து தெளிவான உத்தரவை பெற்று வருமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டால்,சட்ட போராட்டம் நடத்தி அந்த உத்தரவை பெறும்வரை இருதரப்பும் தனிதனியாக சட்டமன்றத்தில் செயல்பட எந்த சட்டத் தடையும் இருக்காது.
இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை நோக்கத்தின் படி, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முதன்மை கடமை இந்திய அரசியல் அமைப்பிற்கும்,மக்களின் தீர்ப்பிற்கும், விசுவாசமாக இருப்பதேயாகும்; அதன் பின்னரே கட்சிக்கான விசுவாசம் வருகிறது.
எனவே, அரசியல் அமைப்பிற்கு முரணான, சட்ட விரோதமான அல்லது ஜனநாயக விரோதமான மக்கள் முடிவிற்கு எதிரான எந்த உத்தரவையும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஏற்க மறுக்கும் உரிமை கொண்டவர்.
சட்டப் போராட்டம் நடத்துகிறேன்.பதவியை நீக்குகிறேன் என கட்சியினரையும் தமிழக மக்களையும் குழப்பாமல் ,மாற்றி மாற்றி ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்திவிட்டு,அழிவுகளை சந்தித்த பின்பு இப்பொழுது அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை தான் சரியான தீர்வு என முடிவெடுத்திருப்பது போல் அல்லாமல்,இருதரப்பும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பேசி முடிவுக்கு வருவதுதான் ஒரே வழி.
By
S.முத்துராஜ்
B.A.,BL.,MBA.,Ph.D.
மேனாள் தகவல் ஆணையர்
தமிழ்நாடு தகவல் ஆணையம்.
[13/05, 06:54] sekarreporter1: 👍👍
[13/05, 07:24] sekarreporter1: [13/05, 07:24] sekarreporter1: https://x.com/i/status/2054379613598703647
[13/05, 07:24] sekarreporter1: [13/05, 07:01] Muthuraj: தற்போது நடைபெறும் அதிமுக MLAக்கள் தொடர்பான பிரச்சினையை, ஏற்கனவே உள்ள எந்த நீதிமன்றத் தீர்ப்புடனும் நேரடியாக ஒப்பிட முடியாது. ஏனெனில், அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சினைகள் தொடர்பாக பல நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சட்டமன்ற பேரவைத் தலைவர், “இவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவர்” என்று நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்திலிருந்து தெளிவான உத்தரவைப் பெற்று வருமாறு அறிவுறுத்தினால், அந்த உத்தரவு கிடைக்கும் வரை இருதரப்பும் தனித்தனியாக சட்டமன்றத்தில் செயல்படுவதற்கு சட்டத் தடைகள் உருவாக வாய்ப்பில்லை.
[13/05, 07:23] sekarreporter1: 👍