சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் எனவும் தீரப்பு….சசிகலா மனு தள்ளுபடி.

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுகளை ஏற்று சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவு….

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் எனவும் தீரப்பு…..

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு…..

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொது செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்….

பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு….

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா கூடுதல் மனு தாக்கல்……

சசிகலா வழக்கை நிராகிரிக்க கோரி பன்னீர் செல்வம், பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல்…..

சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டதலும் சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி மனுவில் தகவல்………

வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனுகளை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு…..

சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி உத்தரவு……

You may also like...