கலைமகள் சபா collecters filed report

கலைமகள் சபா வழக்கு நீதிபதிகள் ரமேஸ், செந்தில்குமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, வேலுார், ராணிபேட்டை, திருவண்ணாமலை , திருப்பத்துார், கோவை உள்பட 7 மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை தாக்கல் செய்தார். ஏற்கனவே 7 மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வேண்டும்என்றார். அப்போது முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கமல்நாதன், சின்னத்துறை ஆகியோர் மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்டத்தில் கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்துவிவரங்களை சரியாக தாக்கல் செய்யவில்லை. இதை கோர்ட் பரிசீலணை செய்ய வேண்டும்என்றனர். அப்போது அட்வகேட் ஜெனரல் ராமன் ஆஜராகி, மற்ற மாநிலங்களில் கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்துவிவரங்களை சேகரிக்க வக்கீல் கமிசனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com