கலைமகள் சபா நிதி நிறுவன மோசடி வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஸ், செந்தில்குமார்

கலைமகள் சபா நிதி நிறுவன மோசடி வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஸ், செந்தில்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இந்த வழக்கில் நாகப்பட்டினம், மயிலாடுதுரை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்ட கலெக்டரகள் கலைமகள் சபா சொத்து விவரங்கள் குறித்த அறிக்கை தனித்தனியாக தாக்கல் செய்துள்ளனர். மதுரை, கோவை கலெக்டர்கள் இடைக்கால அறிக்கையை மட்டும் தாக்கல் செய்துள்ளனர். எனவே 2 மாவட்ட கலெக்டர்கள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வருகிற 25ம் தேதி மதுரை, கோவை மாவட்ட கலெக்டர்கள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இறுதி அவகாசம் கொடுத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல்கள் கமலநாதன் சின்னதுரை ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version