ஓய்வூதிய அகவிலைப்படி 119% லிருந்து கூட்டி வழங்க மரியாதைக்குரிய தொழிலாளர் நீதிமன்றம், சேலம் தீர்ப்பு.

CELL: 9382667639/9498069399
T.PICHAPPA.B.A.,B.L.,P.G.D.L.A.
ADVOCATE (MADRAS HIGH COURT),

OFFICE (CAMP AT SALEM)
SHOP NO.2, PLOT NO.8. 1ST MAIN ROAD, NO.183/79. THIRU NAGAR 2ND MAIN ROAD,
VENKATACHALAM NAGER, HASTHAMPATTI, SaLEM.636007. THIRUMULLAIVOYAL, CHENNAI.600062
———————————————————————————————————————————————-
30.11.2021

ஓய்வு பெற்ற போக்குவரத்துகழக தொழிலாளர் நண்பர்களுக்கு

மகிழ்ச்சியான செய்தி.

ஓய்வூதிய அகவிலைப்படி 119% லிருந்து கூட்டி வழங்க மரியாதைக்குரிய தொழிலாளர் நீதிமன்றம், சேலம் தீர்ப்பு.

திருமதி எம்..காந்தாமணி, முதுநிலை உதவியாளராக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில்(சேலம் ), திருச்செங்கோடு, பணிமனையில் பணி புரிந்து 31.03.2015 அன்று ஓய்வுபெற்றவர். இவருக்கு அடிப்படை சம்பளம் ரூ.12510/- மற்றும் தர ஊதியம் ரூ.2200/- என கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் பெற்றுவந்தார். அவருக்கு 01.09.2013 ஒப்பந்தப்படி அடிப்படைச்சம்பளம் ரூ.13800/- தர ஊதியம் ரூ.2450/- பெரும் தகுதி இருந்தும் அதை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (சேலம் ), நிர்வாகம் கணக்கில் எடுக்கவில்லை. மேலும் ஓய்வூதியத்துடன் வழங்கப்பட்டவந்த அகவிலைப்படியையும் 119% மேல் உயர்த்தி வழங்க மறுத்து வந்தது. ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு சென்னை.2. பல்லவன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் ஓய்வூதிய நிதி நம்பகத்தின் பொறுப்பாட்சியர் ஓய்வூதியம் வழங்கும் பணியை செய்து வருகிறார்.

திருமதி எம்..காந்தாமணி அவர்கள் நீண்ட காலமாக வலியுறித்தி கேட்டும் எவ்விதமான பதிலும் பெறாததால் மே,2015 முதல் செப்டம்பர், 2016 வரை கணக்கிட்டு தனக்கு எதிர்மனுதாரர்களான போக்குவரத்துக் கழகமும் ஓய்வூதிய நிதி நம்பகமும் 107% முதல் 119% அகவிலைப்படி கணக்கீட்டு வழங்கி வருவதாகவும் ஆனால் தனக்கு 113% , 119%, 125% & 132% ஓய்வுபெற்ற மறு மாதத்தில் இருந்து செப்டம்பர் 2016 வரையுள்ள காலத்திற்கு வழங்க வேண்டுமென்று கேட்புமனு தாக்கல் செய்து அந்த மனு (C.P.NO. 31/2018) வின் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த மனுவின் மீது 30.11.2021 அன்று மனுவை அனுமதித்து தீர்ப்புரையை மரியாதைக்குரிய தொழிலாளர் நீதி மன்றம், சேலம் வழங்கியுள்ளது. இதனால் சுமார் 80,000 ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மகிழ்வடைவார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க வழக்கை நான் ஏற்று நடத்தி அதில் வெற்றியும் அடைவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்.
தா.பிச்சப்பா.

You may also like...