jp dmk: ___ஆருயிர் அண்ணன் என். ஆர். இளங்கோ அவர்களின் அருந்தவப் புதல்வன் அன்புத்தம்பி ராகேஷ்க்கு…. நீ வழக்கறிஞராக பதிவு செய்யும் காலம் நெருங்கிவரும் சூழ்நிலையில் உன் தந்தை போல்

[3/10, 23:06] jp dmk: ___ஆருயிர் அண்ணன்
என். ஆர். இளங்கோ
அவர்களின்
அருந்தவப் புதல்வன்
அன்புத்தம்பி
ராகேஷ்க்கு….
நீ வழக்கறிஞராக
பதிவு செய்யும்
காலம் நெருங்கிவரும்
சூழ்நிலையில்
உன் தந்தை போல்
வழக்கறிஞர் தொழிலில் தழைத்தோங்கி
வா!
தம்பி
என நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துப்பா பாட எண்ணியிருந்தேன்!
இப்படி இதய கனத்தோடு
உனக்கு
இரங்கற்பா
எழுத வைத்தது ஏன்?

விஐடி பல்கலைக்கழகத்தில்
சட்ட படிப்பு
முடித்து
உன் பெயர்
பொறிக்கப்பட்ட
பட்டப்படிப்பு
சான்றிதழுக்காக
காத்திருந்தோம்!

ஆனால்
நீ
இறப்பு சான்றிதழ்
சான்றிதழில்
இடம் பிடித்தது
ஏன்?

இளங்கோ
வீட்டின்
இளவரசனே!
இடிபாடுகளுக்கு
இடையில்
சிக்கிக்கொண்டு
சிதைந்தது
உனது
உடல் மட்டுமல்ல
இனி
என்றுமே கட்டி
எழுப்ப முடியாத
உன் இல்லத்தின்
கோட்டையும் தான்

கழகத் தலைவர்
மாண்புமிகு
முதல்வர்
தளபதி அவர்களின்
பொற்கரங்களால்
மன மகிழ்வோடு
மலர்மாலை
எடுத்துக்கொடுத்து
நீ
மணவிழா
காண்பாய்
அதை
நேகிழ்வோடு
கண்டு வாழ்த்த
காத்திருந்த
எங்களுக்கு
தானைத்தலைவர்
நம்
குடும்பத் தலைவர்
உனது
பொன்னுடலுக்கு
மலர்மாலை
வைத்து
மரியாதை செலுத்தி
மனம் கலங்கி
செல்ல
நீ
வைத்தது
ஏன்?

கழகத்தின்
இரு
வண்ணக் கொடி
பறக்கும்
உனது வீட்டில்

உயர்நீதிமன்றத்திலே
குற்றவியல்
துறையில்
உனது தந்தையின்
புகழ்
வெற்றிகொடி
கட்டி பறக்கும்
காலத்தில்
அதை அடுத்த
தலைமுறைக்கும்
ஏந்தி செல்ல வேண்டிய
நீ
கருப்பு கொடியை
ஏந்தியது
ஏன்?

உன் தாத்தா
ரங்கநாதன்
திராவிட
இயக்கத்தின்
செயல் வீரராய்
அறிஞர் அண்ணா
தமிழின தலைவர்
கலைஞர்
உடன்
தமிழக
சட்டமன்றம்
சென்றார்
ஒரு படி மேல்
சென்ற
உன்
தந்தையோ
இந்திய
பாராளுமன்றத்திற்கு
நம்
இனத்தலைவரின்
உரிமைக்
குரலாய்
ஒலிக்க
சென்றார்
அதற்குள்
உனக்கு
ஏன் இந்த
அவசரம்
யாரும்
செல்லமுடியாத
விண்ணுலகம்
சென்றாய்

உனக்கு
பிடித்ததை
எல்லாம்
எடுத்துத்
தந்த
உன் தாய்க்கு
நீ எதை
கொடுப்பதற்காக
நெடுந்தூரம் சென்றாய்

மரக்காணம்
உனது
மரண களமாய்
மாறியதன்
மர்மம்
ஏன்?

தமிழக
சட்டமன்றமும்
அமைச்சரவையும்
இன்று உன் வீட்டின்
முன் கூடியதை
ஊர் பார்த்து
நின்றது
கழகத்தின்
ஒட்டுமொத்த
உடன்பிறப்புகளும்
உனக்காக
கலங்கியது
உன் தந்தைக்கு
ஆறுதல்
வார்த்தையின்றி
தவித்ததை
அறிவாயா?
நீ

பனிபடர்ந்த
அதிகாலை
பயணம்
உன்
கண்களை
மறைத்து
இருக்கலாம்
அதற்காக
எங்கள் விழிகளில்
கண்ணீர்
மழையை
நீ
பெருக்கெடுக்க
விட்டது
ஏன்?

வங்கக்கடல்
அலையோசை
ஆர்ப்பரிக்கும்
கிழக்கு
கடற்கரை
சாலை
விபத்து
உன்னை சார்ந்த
எங்கள்
அனைவருக்கும்
ஆழிப்பேரலையாலய்
மாறியது ஏன்?

தாய் மாமனாய்
உனது
சகோதரியின்
குழந்தைகளுக்கு
ஆற்ற வேண்டிய
கடமையை
நீ
மறந்தது ஏன்?

மருத்துவம் படிக்க
சொன்ன உன்னை
நான் தந்தை போல்
சட்டம் படிப்பேன்
என்று சபதமிட்டாய்

தந்தைக்கு
பெற்ற
புதல்வனாய்
இருப்பதை விட
உற்ற நண்பனாய்
திகழ்ந்தாய்

கழகத் தலைவரின்
வெற்றிக்காக
உனது தந்தை
வகுத்த
வியூகத்தின்
வழியாய்
பிறந்த
தலைமைக்
கழக
தேர்தல்
போர் அறையில்
தமிழகம்
முழுவதுமுள்ள
கழக
வழக்கறிஞர்களை
அணிதிரட்டி
திராவிட
இனப் போருக்கு
தலைமை வகித்த
கழகத் தலைவரின்
தளபதியாய்
திகழ்ந்த
உனது
தந்தைக்கு
நீயும் சிப்பாய்
இருந்து
களப்பணியாற்றினாய்
தேர்தல் பணி காலத்தில்
எப்பொழுது
உன் தந்தையை
தொடர்பு
கொண்டாலும்
அவர் முக்கிய
அலுவலில்
இருக்கும் பொழுதெல்லாம்
“அங்கிள்’ அப்பா
“தலைவரோடு இருக்கின்றார்”
“முக்கிய பணியில் உள்ளார்” என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் நான் அதை அப்பாவின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றேன் என்று கூறி அதை அவர் கவனத்திற்கு செல்வதற்கு முன்பே
உடனுக்குடன் சரி செய்யும்
உன் அணுகுமுறையைப் பார்த்து வயதில் இளையவனாய்
நீ இருந்தாலும்
உன்
முதிர்வை
நினைத்து
பெருமை
கொண்டவன்
நான்
இன்று உன்
பிரிவை
நினைத்து
மனவேதனை கொள்கின்றேன்! திரும்பி
வா!
தம்பி
உன் வீட்டிற்கு
மறுபிறவி
என்று
உண்டு
என்றால்
வேண்டுகின்றேன்!
இளங்கோ
இல்லத்திற்கு
திரும்பி வா!
என்று

உன்
வருகைக்காக
காத்திருக்கும்
உன்
பெற்றோர்களின்
வேண்டுதலை
எல்லாம் வல்ல
இறைவன்
நிறைவேற்றட்டும்
உன் பிரிவில்
இருந்து
உனது குடும்பம்
மீண்டு வரட்டும்
என்று வேண்டுகிறேன்!
கனத்த இதயத்துடன்….. _செந்தமிழ்ச்செல்வன்_
_சி.ஜெயபிரகாஷ்_
[3/11, 06:25] Sekarreporter: 🍁

You may also like...