இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறையும் மாற்றம் அடைய வேண்டும்.* *புதிய தொழில் நுட்பங்கள் குறிப்பாக செயலிகள் போன்ற அம்சங்களை மெட்ராஸ் பார் கவுன்சில் பயன்படுத்தி, நீதியை அணுகுவதை எளிமையாக்க வேண்டும்* – *சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு*

*இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறையும் மாற்றம் அடைய வேண்டும்.*

*புதிய தொழில் நுட்பங்கள் குறிப்பாக செயலிகள் போன்ற அம்சங்களை மெட்ராஸ் பார் கவுன்சில் பயன்படுத்தி, நீதியை அணுகுவதை எளிமையாக்க வேண்டும்*

*சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு*

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2022 ம் ஆண்டு மாதிரி விசாரணை நீதிமன்ற போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து 24 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி கெளரவித்தனர்.

இதில் பட்டறை புதூர் சட்டக் கல்லூரி முதல் பரிசையும், 2 ஆம் பரிசை விழுப்புரம் சட்ட கல்லூரியும், 3 ஆம் பரிசை கோவை அரசு சட்ட கல்லூரியும், 4 ஆவது பரிசை புதுவை சட்ட கல்லூரியும் பெற்றனர்.

ஆய்வு குறித்த போட்டியில் வெற்றி பெற்ற புதுவை சட்ட கல்லூரிக்கு முதல் பரிசும், புதுப்பாகம் சட்ட கல்லூரிக்கு 2ஆம் பரிசும், செங்கல்ப்ட்டு சட்ட கல்லூரிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

அனைத்து விதமான போட்டிகளிலும் அதிக பரிசுகளை வென்றதன் மூலம், வருடாந்திர கோப்பையினை, ஸ்கூல் ஆப் சாஸ்தா யூனிவர்சிட்டி தட்டி சென்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா,

வழக்கறிஞர் சங்கம் மற்றும் நீதிமன்றத்தின் இருக்கை ஆகியவை இரண்டும் ஒரு சக்கர நாற்காலி போல, ஒரு சக்கரம் பழுதடைந்தாலும் அதனை சீரமைத்து தான் ஆக வேண்டும் என பேசினார்.

( எப்பொருள் யார்யார் வாய் கேட்பீனும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு ) என்கிற திருகுறளை உதாரணம் காட்டி இயேசு பிறப்புக்கு முன்பே தமிழர்கள் நீதியில் சிறந்து விளங்கியுள்ளனர்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் இனிய உளவாக எனும் குறளில் சொல்லியிருக்கும் அர்த்தங்கள், ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கு நன்றாக பொருந்தக் கூடும்.

நான் எப்போது எங்கே சென்றாலும், நான் சொல்லுவேன்.. ஆணும் பெண்ணும் சமமே. இந்தியாவில் ஒருவர் 18 வயதை அடைந்த உடன், அவர் வாக்களிக்க தகுதி பெறுகிறார். ஆனால் நீங்கள் அமெரிக்காவுக்கு சென்று பார்த்தால், அங்கு வேறு மாதிரியான நடைமுறை இருக்க கூடும்.

Article 14 இந்தியாவில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்கிறது. அதன்படி இந்தியாவில் பிறந்த எவரும் தலைமை நீதிபதி ஆகலாம். வளர்ந்த நாடாக கூறப்படும் அமெரிக்காவில் கூட இதுபோல ஒரு முறை இல்லை. மக்கள் தொகை வளர்ச்சி பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவை நாட்டில் சில சிக்கல்களை உருவாக்குகின்றன. அந்த சிக்கல்களை தீர்க்க அதிக வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் தான்,உங்களை நான் வரவேற்கிறேன் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த 20 வருடங்களில் எல்லாமே மாறிவிட்டது. நம் மீதான விருப்பம், சமுதாயத்தின் மீதான விருப்பம், குடும்பத்தின் மீதான விரும்பம் என எல்லாம் மாறிவிட்டது. இளைஞர்களின் பொறுப்பு என்பது வரும் தலைமுறைக்கு மிகவும் முக்கியமானது. சட்ட திட்டங்களும் கூட மாற்றத்திற்கான வழிவகுக்கிறது.

நாம் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் எவ்வளவோ முன்னேறி உள்ளோம். முன்னேற்றத்திற்கான வழியை எப்போதுமே தேடிக்கொண்டே இருக்கிறோம். கவனத்திற்குரிய தொழில் முறை என்றால் அது மருத்துவ துறையை தான் சொல்வோம். அதே சமையம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த துறையை ஆட்டி படைக்கிறது. துல்லியமான செயல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செய்து முடிக்கபடுகிறது. ஆனாலும் மருத்துவர்கள் அதற்கு ஈடான வகையில் உழைத்து கொண்டு இருக்கிறார்கள்.

*இன்று ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, 20 வயதினருக்கும், 30 வயதினருக்கும் உண்டான இடைவெளியே வேறுபட்டுள்ளது. 20 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு இடைவெளிக்கு காரணமே தொழில்நுட்ப முன்னேற்றம் தான்.*
*அவர்களுக்கு இடையேயான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பதை அரசியலமைப்பு சட்டம் தான் தீர்மானிக்கிறது*. *அரசியல் அமைப்பின் மூலம் தான் இந்திய ஆள பட வேண்டும்.*

*இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதி துறை மாற்றம் அடைய வேண்டும். புதிய தொழில் நுட்பங்கள் குறிப்பாக செயலிகள் போன்ற அம்சங்களை மெட்ராஸ் பார் கவுன்சில் பயன்படுத்தி, நீதியை அணுகுவதை எளிமையாக்க வேண்டும். இந்திய வரலாற்றில் முக்கியமான பங்கை மெட்ராஸ் பார் கவுன்சில் வகித்து உள்ளது.*

*நம் நாட்டு இளைஞர்களாகிய உங்களின் பங்களிப்பு நீங்கள் என்பது நீங்கள் எங்கிருந்தாலும் நம் நாட்டிற்கு தேவை படுகிறீர்கள். நாம் எங்கெங்கோ ஒரு மூலையில் இருக்கிறோம், ஆனால் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என அவர் பேசினார்.*

You may also like...