அற்புதம் அம்மா என்றாலே அற்புதம் தானே… ஆறறிவு கொண்ட பிள்ளையை பெற்ற அம்மாக்கள் அற்புதம்தான்..

[5/19, 13:22] Merraarumugam: அற்புதம்
அம்மா என்றாலே
அற்புதம் தானே…
ஆறறிவு கொண்ட
பிள்ளையை பெற்ற
அம்மாக்கள் அற்புதம்தான்..
பேரறிவாளனை பெற்ற அன்னை
இவர்
பேரற்புதமல்லவா…
இந்த தாய்
முன்னூறு நாடகள்
கருவாய்
சுமந்ததை விட
முப்பத்துயிரண்டு
ஆண்டுகளல்லவா
சுமந்திருக்கிறார்!!
பாதம் தேய்ந்து
மனமும் ரணமாகி…
ஆனாலும் ஓயவில்லை
இவரின் ஓட்டம்..
இந்திய தலைமகனை
கொன்றதில் தன் மகன்
சம்மந்தப்படவில்லை
என நிரூபிக்க இத்தாய்க்கு
32 ஆண்டுகள்…
காலங்கள் கடந்தாலும்..
இத்தாயின் விடாமுயற்ச்சி
இன்று முடிவுக்கு வந்தது..
ஆம்
உச்ச நீதிமன்றம் இவர் மகன்
நிரபராதி என்றது..
சுமந்து கனத்த கருப்பை
கர்வம் கொண்டது!!
தமிழகமும் பெருமை கொண்டது!!
கணவனுக்காய் நீதிகேட்ட
சிலப்பதிகாரம் போல
இந்த தாயதிகாரமும்
சரித்திரமானது…
“அற்புதம் அம்மாள்”
பெற்ற மகனுக்காய் போராடி
நீதி பெற்ற உம்மை போற்றி
வணங்குகிறேன்..
ச. மீரா ஆறுமுகம்
வழக்கறிஞர்
[5/19, 14:03] Sekarreporter: 🌹

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version