அறநிலையத்துறை சார்பில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் ₹50,000 அபராதம்! Senior advt singaravelan for trustees
அறநிலையத்துறைக்கு
உயர் நீதிமன்றம்
₹50,000 அபராதம்!
மத அமைப்புகளின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடும் பிரிவு குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ₹50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது
கந்தக்கோட்டம் கோவில் நிர்வாகம் மற்றும் அதனுடன் இணைந்த ஏழு கல்வி நிறுவனங்களின் மேலாண்மை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
முன்னதாக, 28.08.2025 அன்றைய விசாரணையின்போதே, கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் துறையின் செயல்பாடுகள் குறித்த விரிவான குறிப்பை அடுத்த விசாரணைக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
பல மாதங்களாகியும், 19.01.2026 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, துறை விதிகளை மீறியுள்ளது என்று கூறி, அபராதம் விதித்தார்
விதிக்கப்பட்ட ₹50,000 அபராதத் தொகையை 21.01.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவிடம் செலுத்த வேண்டும்
மேலும், கோரப்பட்ட விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டது
பள்ளிக் குழு அமைப்பது தொடர்பான அடுத்தகட்ட உத்தரவுகள், வழக்கின் அடுத்த விசாரணையான 17.02.2026 அன்று வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்j