அரசு தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது.
இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்க்ப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வினோத், மீண்டும் இன்று இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்தார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுகிறது என விளக்கமளித்தார்.
அப்போது மனுவில் சில குறைப்பாடுகள் இருப்பதாக பதிவு துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தினந்தோறும் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது என எச்சரித்தார்.