அன்புடன், ஆர். பார்த்திபன் * அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்காலரை துாக்கிவிட்டுக் கொள்ளுங்கள்

*
காலரை துாக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!
*
தினமலர் என்ற ஆலமரத்தின் இலைகளாக விரிந்திருக்கும் நாம், ஒரு புதிய கலாச்சாரத்தின் விதைகளாக வீரியம் பெற வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.
1. என்னை யாரும் கண்காணிக்க தேவையில்லை. என் பணிகளை சிறப்பாக, காலத்தில் செய்து முடிப்பேன். அதற்கு நானே பொறுப்பாளி.
2. நேர்மையில் உறுதியாக இருப்பேன். எத்தனை பொருளாதார நெருக்கடி வந்தாலும் நேர்மை, என் பிறப்புரிமையாக கொள்வேன்.
3. என் உடல் நலத்தையும் மன நலத்தையும் திடமாக வைத்திருப்பதில் அக்கறை கொள்வேன். தியானமோ, உடற்பயிற்சியோ தினசரி பழக்கமாக கொள்வேன்.
4. என் சக ஊழியர்களிடம் நெருங்கிய நண்பனாக பழகுவேன். விரைவாக, சிறப்பாக பணி முடிக்க ஒவ்வொருவரோடும் ஒத்துழைப்பேன்.
5. அடுத்தவரைப்பற்றி, சம்பந்தமில்லாத விஷயங்கள் பற்றி விவாதிக்கவோ, கருத்து கூறவோ மாட்டேன்.
6. எனது குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க நேரம் தருவேன்.
7. எனக்கு கிடைத்திருக்கும் பத்திரிகை பணிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லி, நிழல் தரும் தினமலர் நிர்வாகத்துக்கு விசுவாசமாக இருப்பேன்.
* இந்த 7 மந்திரம், நம்மை சிறப்பாக வாழ வைக்கும். நம்புங்கள் நண்பர்ளே, தினமலர் பணியை ஜாலியாக செய்வோம்.
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில். லட்சியம், நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
– அன்புடன்,
ஆர். பார்த்திபன்
*
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
*

You may also like...