Madras high court nov 2 orders

[11/2, 10:24] Sekarreporter 1: சென்னை வாலிபர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் விசாரணையில் அவர் மரணம் அடைந்தது தொடர்பாக கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், காவல் ஆய்வாளர் மோகந்தாஸ் என்பவர் மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்ததால், விசாரணை நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.

ஆனால், விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது என சிபிசிஐடி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் புலன் விசாரணை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்வதில் சம்பவம் தொடர்பாக 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது, நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, சம்பவ இடத்திலிருந்து ரத்தக்கரை படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில் இருந்து சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை நீதிபதி சிவஞானம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/2, 12:40] Sekarreporter 1: வர்த்தக சின்னம் பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பதிலளிக்க அவகாசம் கோரபட்டதையடுத்து விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அதுவரை பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
[11/2, 15:31] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில், உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு, வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதகான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக தொடபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

அவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் பிரபாகர், கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார். அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், அது ஜனநாயகம் உரிமை என்றும் உறுதிபட தெரிவித்தார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், விசிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பொதுக்கூட்டம், மனித சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ். கேட்பது பேரணிக்கான அனுமதி என்பதால், வழங்க முடியாது என தெரிவித்தார். உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு மாநிலத்தின் பாதுக்காப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் என்.ஆர்.இளங்கோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அவர் கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (நவம்பர் 4) தள்ளிவைத்துள்ளார்.
[11/2, 17:37] Sekarreporter 1: சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வனப்பகுதியில், 1,325 ஹெக்டேர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், நபார்டு திட்டத்தின் கீழ் அவற்றை அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 281 ஹெக்டேர் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் ஓராண்டு காலத்தில் அகற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் செலவு செய்து, மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்த மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட ஏதுவாக மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடுவது தொடர்பான குழுவை 15 நாட்களில் அமைக்க உத்தரவிட்டனர்.

மேலும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இப்பணியை பசுமை தமிழ்நாடு
திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் ஒரு லட்சத்து 19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களில் 2750 ஹெக்டேர் பரப்பில் அமட்டும் அகற்றப்பட்டுள்ளதால், மீதமுள்ள பரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விசாரணைக்கு பின், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஐந்து இடங்களில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்க உள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் வரும் 10ம் தேதி அமைக்க உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
[11/2, 17:38] Sekarreporter 1: மணச்சல்லூர் தொகுதி சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யயக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்ற திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி கடந்த முறை தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றதையடுத்து, மீண்டும் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் பணம் பட்டுவாடா நடைபெற்றுள்ளதாகவும் எனவே வெற்றி பெற்ற திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என சுயேட்சை வேட்பாளர் குருநாதன் தொடர்ந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் அரசு பீளிடர் முத்துக்குமார் ஆஜராகி, ஏற்கனவே மனுதாரர் இதே போன்று மனு தாக்கல் செய்து திரும்ப பெற்றுள்ளதாகவும், ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளரை அறிவித்த தேர்தல் அலுவலர் தகுதி நீக்கம் செய்ய உரிமையில்லை என்றும், விளம்பரத்திற்காக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், மனுதாரர் மாவட்ட தேர்தல் வழக்காக மாவட்ட உரிமையல் நீதிமன்றத்தில் தான் மனுதாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த மனு விசாரணைக்கு உகந்தல்ல என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.madras high court orders Nov 2

You may also like...