ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

[9/21, 06:19] Sekarreporter: ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.செந்தில்குமார் எம்.டி.ஹெச். சாலையில் 3 ஆயிரத்து 227 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இவரது தந்தை காலத்தில் அந்த நிலத்தையும், கட்டடத்தின் உரிமையும் அவரது சகோதருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து செந்தில்குமார், தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது.
இதை எதிர்த்து கே.செந்தில்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, ஆக்கிரமிப்புக்குள்ளான சொத்துக்களை கையகப்படுத்தி, ஆக்கிரமிப்பாளரை உடனடியாக துறை அதிகாரிகள் வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கோயிலுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு தொடர்பாக தகுந்த விசாரணை நடத்தி, வருவாய் இழப்பை மீட்பதற்காக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், கோயில்களின் கட்டுப்பாட்டாளராக அரசு இருப்பதால், அந்த குற்றங்கள் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன என வேதனை தெரிவித்துள்ளார்.

சில பேராசைக்காரர்கள், சில தொழில்முறை குற்றவாளிகள், நில அபகரிப்புக்காரர்களால் கோயில் சொத்துகள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுவதாக எச்சரித்துள்ள நீதிபதி, அரசு அதிகாரிகள் தரப்பில் ஏற்படும் தவறுகள், அலட்சியம், கடமைகளை மீறுவது ஆகியவை தீவிரமாகப் பார்க்கப்பட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
[9/21, 11:31] Sekarreporter: பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை மீறி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை நடத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம் பதிவாளர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், பல்கலைக்கழக மானியக்குழு தொலைதூர கல்வி முறையில் மருத்துவம், பொறியல், விவசாயம், சட்டம், நர்சிங், பல் மருத்துவம், பிசியோதரப்பி போன்ற படிப்புகளை தடை செய்து 2019 ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் திறந்தநிலை மற்றும் தொலைத்தொடர்பு விதிகள் 2020லும் மேற்குறிப்பிட்ட படிப்புகளை தடை செய்தது மட்டுமின்றி நேரடி முறையில் தான் பயில வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இதுபோல அங்கீகாரம் இல்லாத படிப்புகளை நடத்தி வருவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது என மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2015 முதல் தொலைதூர கல்வி நடத்த அனுமதி பெறவில்லை. எனவே பல்கலைக்கழக மானியக் குழுவால் தடை செய்யப்பட்ட படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரடங்கிய நமது முன் இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி மனுகுறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை, அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பிடம் நீதிபதிகள் , தினந்தோறும் பொதுநல வழக்கு தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். நாளை என்ன வழக்கு தொடர்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் பொது நல நோக்கில் தான் வழக்கு தொடர்வதாக தெரிவித்தார்.
[9/21, 12:35] Sekarreporter: நான்கு சக்கர வாகனங்களின் பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது…

நான்கு சக்கர வாகனங்களின் பம்பர்  பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும்ம், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த மத்திய அரசும் தடை விதித்தது. 

மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,
பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதையடுத்து,
கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இதையடுத்து மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்றுவரை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்றும், வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் எந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 1980 முதல் வானங்கள் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே என்றும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிக அவசியம் என்று கருத்து தெரிவித்தனர்.பம்பர் பொறுத்திய வாகனங்க ஓட்டுனர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள் என குறிப்பிட்டனர்.பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, இது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.மத்திய அரசின் உத்தரவை மாநில ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்,மாநில அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
[9/21, 13:36] Sekarreporter: சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள கல் குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள் செய்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொழில்துறைச் செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்த அரசு தலைமை வழக்கறிஞர், சட்டவிரோத குவாரிகளால்
100 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஈடுபட்டவர்கள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வருவாய் இழப்பை வசூலிக்கும் நடவடிக்கையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் பிரபு ஆஜராகி அரசுக்கு இழப்பு குறித்த தகவல் மட்டுமே அறிக்கையில் இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவிட்டபின் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என தெரிவித்ததுடன், சுற்றுசூழல் பாதிப்புக்க்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் குவாரிகள் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பாக மாநில அரசின் திட்டமிடல் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[9/21, 15:15] Sekarreporter: ,ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஊர் காவல் படையினருக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியத்தில் ஐந்து நாட்களை மட்டுமே பணி நாட்களாக நிர்ணயித்து 2007ஆம்.ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஊர்காவல்படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை மட்டும் 10 நாட்களாக அதிகரித்து, 2019ம் பிப்ரவரி 19ஆம் தேதி உள்துறை அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே 560 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்..

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அண்ணாமலை தரப்பில் ஒவ்வொரு மாதமும் 5600 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு கிடைப்பதாகவும், 17600 ஊர் காவல் படையினரில் 76 சதவீதத்தினர் பட்டியலின பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்ட்பட்டது. மேலும் புதுச்சேரி, ஆந்திரா போல ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்களையோ அல்லது ஊதியத்தையோ உயர்த்த வேண்டும் என வலியுறுத்தபட்டது.

தமிழக அரசு தரப்பில் 10 நாட்கள் என்பது குறைந்தபட்ச பணிநாட்களாக நிர்ணயிக்கபட்டதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினரை பணிவரன் முறைப்படுத்த முடியாது எனவும், தாமாக முன்வந்து சேவை செயவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஊதியம் வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் ஊர்காவல் படையில் சேர்ந்து வருவாய் ஈட்டும் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.10 நாட்கள் பணி வழங்கபடுவதாக அரசு கூறினாலும், பல ஊர் காவல் படையினர் மாதம் முழுதும் பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவித்ததுடன், இதை முறைப்படுத்த வேண்டும் என்வும், யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.

ஊர்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கபட்ட 5600 ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, காவல்துறையினரின் ஊதியம் மாற்றியமைக்கப்படும் எனவும் நம்புவதாக தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தனர்.
[9/21, 16:34] Sekarreporter: மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், வனப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருவதாகவும், அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளதாகவும், வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றி நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவுக்கப்பட்டிருந்தது. மனுதாரர் பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நடுவட்டம் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்த பிறகும் தமிழகத்தில்16 ஆயிரம் ஹெக்டேக் அளவிற்கு ஆக்கிரமிப்பில் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.

மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்திய நீதிபதிகள், வனப்பகுதி ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றும் நடவடிக்கை தொடரலாம் என அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com