Whatsapp விசாரணை நீதிபதி சுவாமிநாதன், வழக்கின் மீதான தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்துள்ளார்.

    இந்த வழக்கை வாட்ஸ் அப் அழைப்பு மூலம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி. முத்துக்குமார், காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரும் ஆஜரானார்கள்.

    அப்போது அரசு தரப்பில் தேரின் உயரத்தை தொடும் அளவிற்கே மின் வழித்தடம் அமைந்துள்ளதாகவும், கால்வாய் பணிகளின் காரணமாக தெருக்களின் இருபுறமும் மணல் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற சூழலில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினால் விரும்பத்தகாத சம்பவம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேர்த் திருவிழாவை அனுமதிக்கலாம் என நீதிமன்றம் கருதினால், அப்பகுதிக்குட்பட்ட மாஜிஸ்திரேட்டை ஆய்வு மேற்கொள்ளச் செய்து, அறிக்கை பெற்று முடிவெடுக்கும்படியும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுவாமிநாதன், வழக்கின் மீதான தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...

CALL ME
Exit mobile version