Tvk new case
கரூர் சம்பவம் தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தவெக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில், நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை செய்யவில்லை எனக்கூறி த.வெ.க வழக்கறிஞர் கார்த்திபன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,
உரிய பாதுகாப்பு வழங்குவதில்,
கடமையை செய்ய தவறிய கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் காவல் கண்காணிப்பாளர், கரூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, தமிழக அரசு துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.