Thlagavathi house allotment issue tn gov filed appeal aginst single judge order stayed bench Nisha Banu j Jothiraman judge for gov Aag Ravinthiren argued

ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உயர் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, எழுத்தாளர் மறைமலை இலக்குவனார் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஏற்கனவே வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற தகுதி இல்லை எனக் கூறி இவர்களுக்கான வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து திலகவதி மற்றும் மறைமலை இலக்குவனார் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வீடு ஒதுக்கீடு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் இருவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஜோதி ராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன், அரசின் மேல்முறையீட்டுக்கு பதில் அளிக்கும்படி திலகவதி மற்றும் மறைமலை இலக்குவனார் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version