Symboll mango ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கோபு

*மருத்துவர் ஐயா தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காததால் அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டது ஒருபுறம் வருத்தத்தை அளித்தாலும் எதிர்காலத்தை நினைத்து மருத்துவர் ஐயா பக்கம் நிற்பது அறம் என்பதால் நாங்கள் அவர் பக்கம் நிற்கிறோம்*.

*பதவிக்காலம் முடிந்த பொதுச் செயலாளர் குழுவை கூட்டலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் விதியில் இல்லை*.

*அங்கீகாரத்தை இழந்த பாமகவுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்தால் எப்படி தலையிட முடியும்*.

*விதி எண் 13 இல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, கூட்டங்களை கட்சியின் நிறுவனர் அழைக்கப்பட்டு அவர் வழிகாட்டுதல் படி நடத்தப்பட வேண்டும்*.

*தேர்தல் நேரத்தில் கட்சி சின்னத்தை முடக்க நினைத்தால் நீதிமன்றம் மூலம் சட்டபூர்வமாக உரிமையை நிலைநாட்டுவோம்*.

– *ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கோபு

oplus_0

பேட்டி*.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாமகவின் செயல் தலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அன்புமணி ராமதாசை நீக்கியது குறித்து ஏற்கனவே அன்புமணியின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், இது தொடர்பாக தற்போது சென்னை உயர்நீதிமன்ற வாயில் முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவருமான V.S. கோபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

பாட்டாளி மக்கள் கட்சி 1989 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பு.

இந்த அரசியலமைப்பு தொடங்கிய அந்த ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 36 ஆண்டுகளாக நாங்கள் அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை கையாண்டு உள்ளோம்.

போராட்டங்களில் பங்கெடுத்துள்ளோம் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம் பொது மக்களின் நன்மைக்காக இது அனைத்தையும் செய்திருந்தாலும் கட்சியின் வளர்ச்சி என்பது இல்லாமல் இருக்கிறது என்று கவலை ஒரு பக்கம் இருந்தாலும் கூட அது பெரிதும் எங்களை பாதித்தது கிடையாது.

ஆனால் இந்த 36 ஆண்டுகளில் அடிமட்ட தொண்டர்களாகிய எங்களுக்கு ஒரு பெரிய மனச்சுமையையும் வருத்தத்தையும் தந்த விஷயம் எதுவென்றால் மருத்துவர் ஐயா அவர்களுடைய சொல் பேச்சை கேட்டு நடக்காத தொண்டனாக அன்புமணி உள்ளார்.

அன்புமணி அண்ணன் அவர்களின் செயல் அடிமட்ட தொண்டர்களாகிய எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தந்தது பெரிய பாரத்தை நீண்ட நாட்களாக சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் சுமந்து வருகின்றனர்.

ஏதாவது நல்லது நடக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்தோம் ஆனால் நல்லது நடக்க வாய்ப்பே கிடையாது சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது எத்தனை முறை நீங்கள் எங்களிடம் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பினாலும் பதில் கொடுக்கவே முடியாது என்று தீர்மானமாக இருந்த காரணத்தால் மருத்துவர் ஐயா அவர்கள் அன்புமணி ஐயா அவர்கள் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார்.

இது ஒரு புறம் வருத்தத்தை கொடுத்தாலும் எதிர் காலத்தை நினைத்து நாங்கள் மருத்துவர் ஐயா பக்கம் தொண்டர்கள் இருப்பது அறம் என்பதால் மருத்துவர் அய்யா பக்கம் பயணிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதாலோ பிரச்சாரமாக எடுத்து செல்வதாலோ எதுவும் உண்மையாக போவதில்லை.

அண்ணன் பாலு சில பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதற்கு உங்களை எல்லாம் அழைத்து திரும்பத்திரும்ப சொல்கிறார்.

கட்சி விதி என்ன சொல்கிறது பொது குழுவை கூட்டுவதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது என்று பொதுச் செயலாளருக்கு தான் உள்ளது என்று சொல்கிறது.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி பொதுக்குழுவை கூட்டியதாகவும் அதை கூட்டியது தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் அன்புமணி என்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் என்றும் சொல்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதியில் இல்லாத தலைவராக சொல்லிக் கொள்ளும் நபர் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்.

வடிவேல் ராவணன் தன்னுடைய பதவி காலத்தை முடிவுற்ற நபராக உள்ளார்.

மே 28ஆம் தேதி பொதுச் செயலாளர் பொருளாளர் தலைவர் பதவி முடிவு பெற்றது.

பதவி காலம் முடிந்த பொதுச் செயலாளர் பொதுக்குழு கூட்டலாம் என்று எங்கு விதி உள்ளது என்று அண்ணன் பாலு சொல்ல வேண்டும்.

கட்சி சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் கட்சி விரோதமாக செயல்பட்ட காரணத்தால் வழக்கறிஞர் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் தற்காலிக நீக்கம் கட்சியிலிருந்து செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு தன்னை பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்று சொல்வதற்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது.

அருகதை அற்றவர் தன்னை பாட்டாளி மக்கள் கட்சி என்று சொல்ல தகுதியற்றவர் ஐயாவிற்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாமக மருத்துவர் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று வரை தொண்டர்கள் அவரைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையம் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியது பாமக கட்சியும் மாம்பழ சின்னமும் மருத்துவர் ஐயா அவர்களுக்குத்தான் உரிமையானது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?.

தேர்தல் ஆணையம் சொன்னதாக சொல்கிறார்கள் அதை ஏன் வெளியிடவில்லை.

தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதத்தை உங்கள் முகநூலிலாவது பதிவிடுங்கள் இப்படி குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.

மாம்பழம் சின்னம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் சொன்னதாக நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியில்தான் தேர்தல் ஆணையம் தலையிட முடியும் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது.

அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தினால் கூட முடியாது.

பொதுக்குழு விதி எண் 13-ல் கட்சியின் மாநில பொது குழு செயற்குழு அரசியல் தலைமை குழு கூட்டங்களுக்கு நிறுவனர் அமைக்கப்பட்டு அவரது வழிகாட்டுதல் அடிப்படையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடத்தப்பட்ட பொது குழு கூட்டத்திற்கு மருத்துவர் ஐயாவுக்கு அழைப்பு விடுத்ததாக பச்சை பொய்யை வழக்கறிஞர் பாலு சொல்லி வருகிறார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ஐயாவுக்கு அழைப்பும் கிடையாது அவர் வழிகாட்டுதலும் கிடையாது என்ற நிலையில் அன்று அவர் கூட்டிய பொதுக்குழு செல்லாது.

பொதுக்குழுவை கூட்டி விட்டோம் எங்கள் பொறுப்பு காலத்தை நீட்டித்து விட்டோம் என்று சொல்வது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது சட்டம் படித்தவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள்.

வன்னியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று மருத்துவர் ஐயா அறிவித்தார்.

முதல் போராட்டத்திற்கு எங்கள் சின்னையா அன்புமணி ராமதாஸ் வந்தார்.

ஐயாவுக்குப் பிறகு இந்த சமூகத்தை காக்க இவர் வந்துவிட்டார் என்று நம்பினோம் ஆனால் அதனை தொடர்ந்து எட்டு நாட்கள் நடந்த போராட்டத்தில் அவர் பங்கெடுக்கவில்லை வீட்டில் தான் இருந்தார் அதுபோல் விட்டு விட்டு சென்று விடுவாரோ என்று தோன்றுகிறது.

சுகபோக வாழ்வை ஆயுசு வரை அனுபவிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

மக்களுக்காக போராட எங்கள் ஐயா உள்ளார்.

நீங்கள் இது போல் நடிக்க வேண்டாம் நடைப்பயணம் என்று நடிக்க வேண்டாம் இந்த நடை பயணத்தை முன்பே செய்திருந்தால் கட்சி இரண்டாக உடைந்து இருக்காது.

கட்சிப் பிளவு படுவதில் யாருக்கு அதிகம் விருப்பம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் தான் ஸ்வீட் எடு கொண்டாடு என்று சொல்கிறார்கள்.

கட்சித் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.

தேர்தல் ஆணையம் யார் இந்த கட்சி குறித்த கருத்து சொல்வதற்கு.

பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு ஏகோபித்த ஆதரவோடு மருத்துவர் ஐயா கட்சியின் தலைவராக உள்ளார்.

அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு தேர்தல் ஆணையம் நீங்கள்தான் தலைவர் செயலாளர் என்று சொல்ல உரிமை இல்லை.

தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்ற முறையில் எங்கள் கட்சிக்கு சுயேட்சை சின்னம் என்ற அளவுக்கு தான் பார்ப்பார்கள்.

தேர்தல் நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் மாம்பழ சின்னத்தை கேட்டு நிற்கும் பொழுது அந்த சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையம் செயல்படலாம்

எங்களை மீறி மற்றவருக்கு இந்த சின்னத்தை கொடுக்கிறார்கள் என்றால் அப்போது நீதிமன்றத்திற்கு சென்று மாம்பழம் சின்னம் எங்களுக்கு கூறியது என்று நிலைநாட்டுவோம்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com