You may also like...
-
Tv top news
by Sekar Reporter · Published July 25, 2020
-
நிலம் விற்பனை தொடர்பான பிரச்சினையில் ஒரு குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டியதாக காவல்துறை உதவிஆய்வாளர் மீதான புகாரை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் தன் மகனுடன் சேர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிராமத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசப் நாசியா ஆகியோர் நிலத்தை வாங்க முன் வந்தனர். இதற்காக முன்தொகை தந்தனர். இதன்பின்னர் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்டனர். பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க எங்களால் முடியவில்லை. இதையடுத்து எங்கள் மீது கூத்தாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்ற உதவிஆய்வாளர் தங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்தார். 3 வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுக்காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். இதுகுறித்து திருவாரூர் காவல்துறை துணை கண்கானிப்பாளரிடம் புகார் செய்ய முயற்சித்தோம். ஆனால், கடந்த நவம்பர் 18ம் தேதி, உதவிஆய்வாளர் மற்றும் நிலத்துக்கு முன்தொகை கொடுத்த 3 பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். உதவிஆய்வாளர் என் கணவரையும், என்னையும் அடித்து எங்களது வீட்டை விட்டு விரட்டினார். தற்போது எங்கள் வீட்டை அவர்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும், எங்கள் வீட்டை எங்களிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த மாதம் 27ம் தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.அவரது வீடும், வீட்டுக்குள் உள்ள விலை உயர்ந்த பொருட்களும் சட்டவிரோதமாக கையகப்படுத்தி விட்டனர் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக கூத்தாநல்லூர் உதவிஆய்வாளறுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த உத்தரவில், வீட்டுக்குள் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்கக்கூடாது என்பதை நினைவுப்படுத்துகிறேன். என்று தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்
by Sekar Reporter · Published December 2, 2021
-
Mhc advt vinoth pandian today tips
by Sekar Reporter · Published January 7, 2021