sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1606255560273195008?t=DVihZl21vHesY2z2cJQL3g&s=08 [12/23, 17:19] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் இறந்த மாணவி பயன்படுத்திய மொபைல் போனை காவல்துறை வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தும், மேற்படி மொபைல் போனை சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

[12/23, 17:19] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1606255560273195008?t=DVihZl21vHesY2z2cJQL3g&s=08
[12/23, 17:19] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் இறந்த மாணவி பயன்படுத்திய மொபைல் போனை காவல்துறை வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தும், மேற்படி மொபைல் போனை சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் பலமுறை அவர்களுக்கு காவல்துறையினர் சார்பில் சம்மன் அனுப்பியும் அவர்கள் அந்த மொபைல் போனை ஒப்படைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தெரிவித்தது. அதற்கு பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு மொபைல் போன் தங்களிடம் இல்லை என கூறினார். அதற்கு நீதிபதி சந்திரசேகரன் மாணவியின் மொபைல் போனை வழங்காவிட்டால் பெற்றோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என எச்சரித்து மொபைல் போனை ஒப்படைக்க சொல்லி வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிபதி சந்திரசேகரன் முன்பாக முறையிட்ட பெற்றோர்கள் தரப்பு வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு மாணவியின் மொபைல் போனை காவல்துறையிடம் நாங்கள் ஒப்படைக்க மாட்டோம். வேண்டுமானால் அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கிறோம். அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் திரு S. சந்தோஷ், நான் அதை பெற்று கொள்ள மாட்டேன். அதை புலன் விசாரணை மேற்கொண்டிருக்கும் காவல் துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி சந்திரசேகரன் வழக்கை புலன் விசாரணை செய்து வருவது காவல்துறையினர் அவர்களிடம் அந்த மொபைல் போனை வழங்கினால் தான் அவர்கள் உடனடியாக அதை பாரன்சிக் லேபுக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும். எனவே காலம் தாழ்த்தாமல் காவல்துறையினரிடம் மொபைல் போனை ஒப்படையுங்கள் என்று சொல்லி பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதெல்லாம் மொபைல் போன் தங்களிடம் இல்லை என்று கூறிவந்த நிலையில்ää தற்போது மொபைல் போனை ஒப்படைக்கிறேன் என்று சொல்லி இருப்பதன் மூலம் இந்த மொபைல் போன் இதுவரை அவர்களிடத்தில் தான் இருக்கிறது என்பது வெளிவந்துள்ளது. இது புலன் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...