sekarreporter1: http://youtube.com/post/UgkxUyb9iD4ArYcEDi0LcsfM5BBR_gJ2KcOa?si=nCkIq5Knve3NbTUK [10/07, 16:25] sekarreporter1: [10/07, 16:24] sekarreporter1: http://youtube.com/post/UgkxBRC6LgDGnhRqcrglhbooSCDR_aqNgeV5?si=Kn5AodRUPQHSTYet [10/07, 16:24] sekarreporter1: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற வழக்கு வாபஸ்; சிவாச்சாரியார்கள் தரப்பு வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு மதுரை அருள்மிகு மீனாட்சி

[10/07, 16:25] sekarreporter1: http://youtube.com/post/UgkxUyb9iD4ArYcEDi0LcsfM5BBR_gJ2KcOa?si=nCkIq5Knve3NbTUK
[10/07, 16:25] sekarreporter1: [10/07, 16:24] sekarreporter1: http://youtube.com/post/UgkxBRC6LgDGnhRqcrglhbooSCDR_aqNgeV5?si=Kn5AodRUPQHSTYet
[10/07, 16:24] sekarreporter1: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற வழக்கு வாபஸ்; சிவாச்சாரியார்கள் தரப்பு வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் மனுதாரர் சத்தியபாமாவுக்கு பங்கேற்று மந்திரங்கள் ஓதும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி திரு. சுஷ்ருத் அரவிந்த் தர்ம அதிகாரி மற்றும் நீதியரசர் திரு. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதற்கிடையில், வழக்கின் தீர்ப்பு சிவாச்சாரியார்களின் உரிமைகள் மற்றும் ஆகம மரபுகளை நேரடியாக பாதிக்கும் என்பதால், தங்களையும் வழக்கில் ஒரு தரப்பினராக சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று சிவாச்சாரியார்கள் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வள்ளியப்பன், இந்த விவகாரம் புதிதானதல்ல என்றும், 1972-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் Seshammal தீர்ப்பு, 2016-ஆம் ஆண்டு Adi Saiva Sivachariyargal Nala Sangam தீர்ப்பு, 2022-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் மூலம் இப்பிரச்சினை ஏற்கனவே சட்டரீதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். மேலும், அந்த தீர்ப்புகளுக்கு எதிரான சில விவகாரங்கள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆகமக் கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்ட பிரதிஷ்டை மற்றும் சம்ரோக்ஷண சடங்குகளை ஆகம விதிகளின்படி தகுதி பெற்ற சிவாச்சாரியார்களே நடத்த முடியும் என்றும், வெளியாட்கள் (Interlopers) யாரும் அச்சடங்குகளில் மந்திரங்கள் ஓதவோ அல்லது குடமுழுக்கை நடத்தவோ சட்டப்பூர்வமான உரிமை கோர முடியாது என்றும் வலியுறுத்தினார்.
இது தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான விவாதமல்ல என்றும், ஆகம மரபுகள் மற்றும் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் கோயில் சடங்கு முறைகளைப் பற்றிய விவகாரம் என்றும் அவர் விளக்கமளித்தார். ஆகம விதிகளின்படி குடமுழுக்கு சடங்குகள் சமஸ்கிருத மந்திரங்களுடன் நடைபெறும்; அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கோயிலின் மரபிற்கேற்ப தேவாரம், திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி உள்ளிட்ட திருமுறைகள் பாடப்படுவது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின்போது, மனுதாரர் தனது பொதுநல வழக்கில் தனக்கே உரிய தனிப்பட்ட உரிமையைக் கோரியிருப்பதையும், மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சட்டரீதியான ஆதாரம் இல்லை என்பதையும் முதல் அமர்வு சுட்டிக்காட்டியது. மேலும், மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிமன்றம் தெளிவுபடுத்திய நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரினார்.
அதை ஏற்றுக் கொண்ட முதல் அமர்வு, மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததுடன், வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கி, ரிட் மனுவை “வாபஸ் பெறப்பட்டதாக” (dismissed as withdrawn) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com