Sasikala flag பயன்படுத்தலாமா சட்டநிபுணர் கருத்து

[2/4, 19:46] Sekarreporter1: [2/4, 19:31] Patty Jeganathan Mhc Advt: சேகர், திமுக கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ,கட்சி பொறுப்பிலும் இருந்த வை.கோபால்சாமி, தலைவர் அனுமதி இல்லாமல், விடுதலைப்புலிகளை சந்திக்க இலங்கை சென்றார். கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.கட்சி அவரை நோட்டீசும் அனுப்பி கட்சியில் இருந்து நீக்கியது. உடனே அவர் சில தொண்டர்களை சேர்த்துக் கொண்டு, திமுக என் கட்சி, நான் தலைவர் என்று சொல்லி, கட்சி கொடியை காரில் கட்டி கொண்டார். தேர்தல் ஆணையத்தில் மனு தந்தார். திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்சி கொடியை பயன் படுத்த கூடாது என்று கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கப்பட்டது. உடனே அவர் தேர்தல் கமிஷனில், நாங்கள் தான் திமுக, கொடியை பயன்படுத்த உரிமை உண்டு என்று வாதாடினார். தேர்தல் ஆணையம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. “அதிமுகவில், சசிகலா, சிறையில் இருக்கும் போதும், பொது செயலாளர். OPS க்கும் EPSக்கும் வழக்கு. சசிகலாவுக்கு எந்த நோட்டீசும் அனுப்பவும் இல்லை. அவரை நீக்க எந்த நடவடிக்கையும் இல்லை. OPS ம் EPSம் கூட்டு சேர்ந்து, பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கினார்கள், அதற்கும் எந்த நோட்டீசும் இவர்கள் அனுப்பவில்லை. ஆகையால், சசிகலா இப்போதும் உறுப்பினர். நோட்டீசு அனுப்பி, வாய்ப்பு கொடுக்காமல், விளக்கம் கேட்காமல், உறுப்பினரை நீக்க முடியாது. ஆக சசிகலா இப்போதும் உறுப்பினர். கொடியை காரில் கட்ட உரிமை உண்டு. ”
[2/4, 19:45] Sekarreporter1: Tks
[2/4, 20:09] Sekarreporter1: [2/4, 20:08] Patty Jeganathan Mhc Advt: சேகர், டிஜிபியிடம் புகார் மனு. கொடியை காரில் கட்டகூடாது.நடவடிக்கை எடுங்கள். எந்த சட்டத்தில் நடவடிக்கை எடுப்பார். கோர்ட்டில் தடை உத்தரவு இருந்தாலாவது, நடவடிக்கை எடுப்பார். தடை இல்லை. எப்படி தடுப்பார் சேகர். திரிசங்கு சொர்க்கம் சேகர்.
[2/4, 20:09] Sekarreporter1: ☘️

You may also like...