Sand case fine not reduced

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் தனக்கு சொந்தமான டாரஸ் லாரியில் 4 யூனிட் ஆற்று மணலை கடத்தியதாக வெல்லூர் போலிசார் லாரி ஓட்டுனர் தேவராஜ் என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர் என்றும் அந்த லாரியின் உரிமையாளர் தான் என்று மேற்கண்டசெல்வி என்பவர் நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் முன்பு மனு செய்தார் என்றும் மாவட்ட நீதிபதியால் ஒரு லட்சரூபாய் அபராதம் கட்டி லாரியை திரும்பபெற்றுகொள்ளலாம் என்று தீர்பளிக்கப்பட்டது என்றும் தன்னால் ஒரு லட்ச ரூபாய் அபராத தொகையைத் கட்ட முடியவில்லை என்றும் அதனை 25,000மாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்ட மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதியரசர் ரவீந்திரன் கனிமவளம் நாட்டின் சொத்து மணல்திருட்டு இயற்கைக்கு எதிரான குற்றம்அதனை அனுமதிக்கமுடியாது என்ற அரசுவழக்கறிஞர் பிரபாவதியின் எதிர்ப்பை பதிவு செய்து ஒருலட்ச ரூபாய் அபராத்தொகையை கட்ட வேண்டும் என்றும் கூறி தள்ளுபடி செய்தார்

You may also like...