Remove Two leaves symbol / dmk case withdraw
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மினி பஸ்களில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னத்தை நீக்கக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், மினி பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டது. அதேபோல அம்மா குடிநீர் பாட்டில்களிலும் இரட்டை இலை சின்னம் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு தடை விதிக்கக் கோரியும், மினி பஸ்களில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அகற்றக் கோரியும் திமுக சார்பில், அதன் பொருளாளர் ஸ்டாலின், 2013 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தற்போது செல்லத்தக்கதல்ல என்பதால், மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து, நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.