Ramkumar Aadhithan – PIL Cases: இன்று 29.07.2021,தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு வரிசை எண் 16 வழக்கு எண் WP No. 15612 of 2021. கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 01.06.2021 அன்று மத்திய அரசின் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ 12 ம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து

[7/29, 06:38] Ramkumar Aadhithan – PIL Cases: இன்று 29.07.2021,தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு வரிசை எண் 16 வழக்கு எண் WP No. 15612 of 2021.

கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 01.06.2021 அன்று மத்திய அரசின் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ 12 ம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் கடந்த 05.06.2021 அன்று 12 ம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் 10,11 மற்றும் 12 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்க வழிமுறைகளை வெளியிட்டனர். இந்த மதிப்பெண்கள் 31.07.2021 முன்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல் மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களில் மாணவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் கூடுதல் மதிப்பெண்கள் பெற தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைய மாணவர்கள் 10,11ம் வகுப்பில் நன்கு படிக்காமல் இருந்திருக்கலாம். 12ம் வகுப்பு மதிப்பெண்கள் தான் ஒருவரின் மேற்படிப்பை நிர்ணயம் செய்வது. ஒருவர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பீடு முறை மதிப்பெண்கள் முறையைவிட எழுதும் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் அதனால் எவ்வித பயனும் இல்லை. அதற்குள் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை இறுதி செய்யப்படும். எனவே, தற்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிறகு தான் உயர்கல்வி நிறுவனங்கள் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டும். அதே போல் மதிப்பீட்டு முறை மற்றும் தேர்வு முறையில் அந்த மாணவர் பெறும் மதிப்பெண்களில் எவை கூடுதலோ அதனை அந்த மாணவரின் மதிப்பெண்களாக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.

அறிவியல்
எனவே, தமிழக அரசு உடனடியாக கல்வியாளர்களை கொண்டு ஒரு குழு உயர்கல்விகளை நெறிப்படுத்தி வரும் யூஜிசி, மெடிக்கல், டெண்டல், நர்சிங் கவுன்சில், ஏஐசிடிஇ மற்றும் பார்கவுன்சில் உடன் கலந்து ஆலோசித்து தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பயிலுபவர்களுக்கு தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தவும், அனைத்து வகையான இளங்கலை பட்டப்படிப்பின் கால அளவை 180 நாட்களில் இருந்து 170 அல்லது 160 நாட்களாக குறைக்கவும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கி, அவர்கள் தேர்வு முடிவை உயர் கல்வி சேர்க்கைக்கு முன் அறிவிக்கவும், மாணவர்களின் கல்லூரி கல்வி பருவ அட்டவணை மாறாதவாறு, மாணவர்கள் பாதிக்காதவாறு அதாவது தற்போது மூன்றாண்டு பட்டப்படிப்பில் சேர்பவர்களுக்கு மட்டும் மே 2024லும், நான்காண்டு படிப்பிற்கு மே, 2025லும் ஐந்தாண்டு படிப்பிற்கு மே. 2026 ல் பூர்த்தி செய்யுமாறு இளங்கலை படிப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும். என மனு 08.06.2021 மற்றும் 10.06.2021ஆகிய தேதிகளில் அனுப்பி உள்ளேன். அதனடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.
பா. இராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
[7/29, 06:38] Ramkumar Aadhithan – PIL Cases: Item 16 in CJ Bench, list dated 29.07.2021
[7/29, 07:02] Ramkumar Aadhithan – PIL Cases: நீதிபதி திரு. கிருபாகரன் அவர்கள் அமர்வில் விசாரணை. தலைமை நீதிபதி அமர்வில் அல்ல

You may also like...