Murugavel Advt Admk: ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு சம்பந்தமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை தேர்தல் ஆணையர் இடத்திலே புகார் மனு.

[9/25, 17:26] Murugavel Advt Admk: ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு சம்பந்தமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை தேர்தல் ஆணையர் இடத்திலே புகார் மனு.

நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேர்மறையாக இந்த தேர்தலை சந்திக்க திராணி இல்லாத திராவிட முன்னேற்றக் கழகம், அரசு எந்திரத்தை பயன்படுத்தி 9 மாவட்டங்களில் பல இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சட்டத்திற்கு புறம்பாக தள்ளுபடி செய்திருக்கிறது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஒன்றியக்குழு உறுப்பினர்களுடைய மனுக்களையும், தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருடைய மனுவையும், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருடைய வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சொல்லி இருக்கக் கூடிய காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முன்மொழிந்து இருக்கக்கூடிய வாக்காளர் வேறு ஒரு வேட்பாளருக்கு முன்மொழிந்து இருக்கிறார் என்று வேட்பு மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்துச் சென்று நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு தான் முன்மொழிந்து இருக்கிறேன் வேறு யாருக்கும் முன்மொழியவில்லை என்று சொன்னாலும், அந்த முன்மொழிந்த வாக்காளரின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இல்லை.

இது ஏதோ
திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, தேர்தல் விதிகளுக்கு மாறாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறுகின்ற பட்சத்தில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இடத்திலே புகார் மனுவை அளித்து இருக்கிறேன்.

அந்த புகார் மனுவை முழுவதுமாக படித்து பார்த்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கருத்துரு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

இவன்
ஆர். எம். பாபு முருகவேல்,
கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்,
கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்,
கழக செய்தி தொடர்பாளர்.
[9/25, 17:27] Sekarreporter.: 💐

You may also like...